தாய்மொழியை பாதுகாப்போம் : கவிஞர் வைரமுத்து
உலக தாய் மொழி நாளன்று தமிழுக்கென்று சில திட்டங்களும், கொள்கைகளும் வகுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழில் பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை பாடியதால் மூலம் அறிமுகமானார். இவர் இன்று தாய்மொழி தினத்தை முன்னிட்டு தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘உலக தாய் மொழி நாளன்று தமிழுக்கென்று சில திட்டங்களும், கொள்கைகளும் வகுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். உலகமயமாதல் என்ற பெரும் பூதம் உள்ளூர் கலாச்சாரத்தை விழுங்குகிறது. மொழியின் மீது வாய் வைக்கிறது. மொழியை தின்று செரித்துவிட்டு தன்னுடைய சுவடுகளை பாதிப்பதற்கு முயற்சி செய்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.