கொரோனா வைரஸிற்கு முடிவு நெருங்கிவிட்டது.!
உலகம் முழுக்க கொரோனா தொற்று அச்சம் உலக மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. பல நாடுகளில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று குறித்து நோபல் பரிசு பெற்றவரும், ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான மைக்கேல் லெவிட் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. மக்கள் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதை வெகுவாக குறைத்துவிடலாம். என கூறியுள்ளார்.
இவர்தான், சீனாவில் ஒரு கொடிய வைரஸ் வரும் அது சுமார் 80 ஆயிரம் பேரை தாக்கும் இதனால் 3250 பேர் உயிரிழப்பர் என முன்னரே கூறியிருந்தார். இவர் கூறியது போலவே சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு நோய் தொற்று இருந்தது. மேலும், 3277 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அவர் கூறியது போலவே சீனாவில் நடைபெற்றது மேலும், தற்போது கொரோனா தாக்கம் குறைந்து சீனா மீண்டு பழைய நிலைக்கு வர தொடங்கியுள்ளது.
பேராசிரியர் கூறியது போல சீனாவில் நடைபெற்றதால், அவர் கூறியது போல கொரோனா தொற்றும் விரைவில் முடிவுக்கு வரும் என மக்கள் நம்புகின்றனர். சமூக விலகலை தீவிரமாக கடைபிடித்தால் நோய் தொற்று ஏற்படாது.