இந்தியன் 2 தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் – ஷங்கர்..!!

Default Image

இந்தியன் 2 தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் என்று இயக்குனர்  ஷங்கர் மனு செய்துள்ளார். 

இயக்குனர் ஷங்கர் இந்தியன் – 2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில்  இயக்குநர் ஷங்கர் “லைகா நிறுவனம் பல உண்மைத் தகவல்களை மறைத்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. முதன் முதலாக இந்தப் படத்தை  தில்ராஜு என்பவர் தயாரிக்க முன்வந்தார், ஆனால் அதற்கு பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது.

ரூ. 270 கோடி படத்தைத் தயாரிக்க செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டது, அதை லைக்கா நிறுவனம் ஏற்று பட்ஜெட்டை ரூ.250 கோடியாகக் குறைத்தும், படப்பிடிப்பைத் தொடங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியது.  தில்ராஜு படத்தைத் தயாரித்திருந்தால் இந்தியன் 2 திரைப்படம்  ஏற்கெனவே வெளியாகியிருக்கும்.

நிதி ஒதுக்கீட்டில் தாமதம் மற்றும் அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நடிகர் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் இயக்குநர் ஷங்கர் தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.

லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் ஷங்கர் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்