சிம்புவின் மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் கூறிய தகவல்.!
சிம்புவின் மாநாடு படத்தினை குறித்த அப்டேட்களை கேட்டவர்களுக்கு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அரசு அனுமதி அளித்தவுடன் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, எஸ் ஜே. சூர்யா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் பிப்ரவரி மாதம் முதல் நடந்து வந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஊரடங்கில் பல படங்களின் அப்டேட்களும் வெளியாகிய நிலையில் சிம்புவின் மாநாடு படம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த சிம்பு ரசிகர்கள் தயாரிப்பாளரிடம் மாநாடு படம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அதற்கு பதிலளித்துள்ளார். அதில் அனைவரும் மாநாடு படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகின்றனர்.தற்போது அனைத்து சினிமாயுலகமும் அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அரசு பச்சை கொடி காட்டிய அடுத்த தினத்திலிருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Hi friends, EveryOne r asking abt #Maanaadu updates. As of nw Industry s waiting for Government’s Green signal. Once the permission granded immediately, we wl b on floor…stay safe!#SilambarasanTRFans #STRFans
— sureshkamatchi (@sureshkamatchi) July 19, 2020