நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், படத்தின் அப்டேட் காக ரசிகர்கள் காத்துள்ளனர், நாளை அஜித் பிறந்த நாள் முன்னிட்டு வலிமை படத்தின் அப்டேட் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கோவிட் 19 கொரோனா என்னும் கொடிய நோயால் அகிலம் உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்திற்கும் விளம்பரம் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துளோம் என்று தெரிவிக்கிறோம். அதுவரை தனித்திருப்போம் நம் நலம் காப்போம்” என்று பதிவு செய்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…