கொரோனாவுக்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகள் – உலக சுகாதார அமைப்பு..!
கொரோனாவுக்கு பிறகு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவலால் உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
மேலும் கொரோனா பாதிப்புகளிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் உடலில் அதிக பிரச்சனைகள் எழும் என்று கருதுகின்றனர். இது குறித்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள் குறித்த தரவுகள் தற்போது இல்லை என்று கூறியுள்ளது.
மேலும் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளதாவது, இந்த கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் நிச்சயமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த கொரோனா பாதிப்பு பிரச்னைகள் எத்தனை நாட்கள் தொடரும் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. மேலும் இது குறித்து தெரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.