புரோ கபடி சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..!
புரோ கபடி தொடரின் 7வது சீசன், ஐதராபாத்தில் இன்று (ஜூலை 20) தொடங்கி அக்டோபர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த கபடி தொடர் 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தாண்டு தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ், குஜராத் பார்ச்சூர் ஜெயன்ட்ஸ், உபி யோதா, பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, புனேரி பல்தான் என 12 அணிகள் மோதுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 11அணிகளுடன் தலா 2 போட்டியில் மோதும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். மீதமுள்ள 2 அணிகளை எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும். இந்த புரோ கபடி தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.2 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.