பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா ….! என்ன காரணம் தெரியுமா…?
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் வீட்டிற்குள் நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு மற்றும் பாவனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.
ஆனால் பிரியங்கா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரியங்கா வெளியேற்றப்பட்டு உள்ளது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விரைவில் பிரியங்கா மீண்டும் உள்ளே செல்வார் என கூறப்படுகிறது.