விஜய் பட நடிகைக்கு 144 கோடி மதிப்பில் அமெரிக்காவில் தனி வீடு!
விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்துவிட்டார். இவர் சென்றாண்டு பாடகர் நிக் ஜோன்ஸை காதல் திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இந்த தம்பதி அமெரிக்காவில் புதியதாக 7 படுக்கையறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளார்களாம். அந்த வீட்டின் விலை 20 மில்லியன் டாலராகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 144 கோடி ரூபாயாம். இந்த வீட்டின் பரப்பளவு 20,000 சதுரஅடியாகும். இந்த வீட்டில் தியேட்டர், பார், நீச்சல்குளம் என சகல வசதிகளும் இருக்குமாம்.