சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டிச்சென்ற பிரியங்கா சோப்ரா!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ்-ஐ காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் அதிகம் தேடப்பட்டுவந்த பிரபலத்தின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதில் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. சென்ற வருடம் அக்டோபர் முதல் இந்த வருட அக்டோபர் வரை இவரை 27.4 மில்லியன் பேர் தேடியுள்ளனர்.
இவருக்கு பிறகு தான் சன்னி லியோன் இருக்கிறார். அடுத்த இடத்தை தீபிகா படுகோனே இடப்பிடித்துளளார். நடிகர்களில் முதலிடம் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் தான்.