பிரியங்கா சோப்ரா நீரவ் மோடியின் தொடர்பை துண்டிக்கிறார்?
நடிகை பிரியங்கா சோப்ரா நகை வடிவமைப்பாளர் நீரவ் மோடியின் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமக்கு வரவேண்டிய தொகைக்காக அந்த நிறுவனத்தின் மீது பிரியங்கா சோப்ரா சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்படும் நீரவ் மோடியை குறித்த செய்திகள் வெளியானதையடுத்து, தமது ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரியங்கா சோப்ரா திட்டமிட்டுள்ளார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, லிசா ஹைடன் உள்ளிட்ட பலர் நீரவ் மோடியின் வர்த்தக விளம்பரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.