12 வருடங்களுக்கு பிறகு நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ என்ற தமிழ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதனையடுத்து பல தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த இவர் கடைசியாக தமிழில் 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘சாருலதா’ என்ற படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல தெலுங்கு படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்போது அசுரன் படத்தின் ரீமேக்கான நாரப்பா படத்திலும், இந்தியில் மைதானம், தெலுங்கில் விராட்ட பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்கு பிறகு ஒரு திரில்லர் கலந்த தமிழ் படத்தில் களமிறங்கவுள்ளார். ‘கொட்டேஷன் கேங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்கவுள்ளார். இவர் அருண்விஜய்யின் பாக்ஸர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காயத்ரி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்தில் பிரியாணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், பிரியாமணி ஒப்பந்தத்தின் பெயரில் கொலைகளை செய்பவராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படம் மும்பையின் தாராவியில் படமாக்கவுள்ளதாகவும், இது கேரளாவை சேர்ந்த ஒரு நிஜ கும்பலால் ஈர்க்கப்பட்ட படம் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…