மாபியாவிற்கு பின் மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய மாபியா திரைப்படத்திற்குப் பின் மீண்டும் அருண் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாபியா. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இவர்களது ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தற்பொழுதும் பிரியா பவானி சங்கர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தியன்2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பல கமர்ஷியல் படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தற்பொழுது அருண் விஜய்யுடன் மற்றொரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் ஹரி தனது மைத்துனரான அருண் விஜய்யை வைத்து இயக்க கூடிய அருவா எனும் படத்தில் பிரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளா.ர் ஏற்கனவே இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மீண்டும் இவர்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்திற்கான புதிய அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025