வைகைப்புயல் வடிவேலுடன் இணையும் பிரியா பவானி சங்கர்.!
சுராஜ் – வடிவேலு இணையும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான அறிவிப்பு விழா கடந்த சில நாட்களுக்கு நடைபெற்றது. விழாவில் பேசிய வடிவேலு, “வரலாற்று சம்பந்தப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்கவே மாட்டேன்.. அரசியலை விட மக்கள் விருப்பப்படி, திரையில் நடிப்பேன் என தெரிவித்திருந்தார்.
நீண்ட ஆண்டுகள் கழித்து படங்களில் நடிக்க ஆரம்பித்த வடிவேலுவை திரையில் பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில், சுராஜ் – வடிவேலு கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும், நடிகை பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த 12-ஆம் தேதி வடிவேலு பிறந்தநாள் அன்று நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வடிவேலுவுடன் அவர் இருக்கும் எடிட் செய்த புகைப்படத்தை வெளியிட்டு “நான் அதிர்ஷ்ட பெண்” என பதிவிட்டிருந்தார்.