தனியுரிமை அச்சுறுத்தல்கள்:ஃபேஸ்புக்கில் முக்கிய அம்சத்தை நீக்க நிறுவனம் முடிவு!

Published by
Edison

தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமீபகாலமாக ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது,அதன்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வர் சில மணி நேரம் செயலிழந்த காரணத்தால் அதன் பல பயனர்களை நிறுவனம் இழந்தது.அதே சமயம், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பிற செயலிகளையும் வழிநடத்தி வந்த நிலையில்,இந்த தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள்ளது. எனினும் தனது சமூக ஊடக செயலியின் பெயரை ஃபேஸ்புக் என்றே தொடர்கிறது.

இந்த நிலையில்,ஃபேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் முக அங்கீகார( face recognition) அம்சத்தை நீக்குவதற்கான திட்டங்களை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தனியுரிமைச் சிக்கல்கள் காரணமாக ஃபேஸ்புக்கில் இருந்து முக அங்கீகார அம்சத்தை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.நிறுவனத்துக்கு எதிர்மறையான பொதுக் கருத்து மற்றும் மெட்டாவேர்ஸில் கவனம் செலுத்துவதற்கான நிறுவனத்தின் திட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இது தொடர்பாக,மெட்டாவின் துணைத் தலைவர் ஜெரோம் பெசென்டி கூறுகையில்: “இந்த மாற்றம் தொழில்நுட்ப வரலாற்றில் முக அங்கீகார பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்.

எனினும்,முகத்தை அடையாளம் காணும் அல்காரிதம்கள் உடனடியாக நிறுத்தப்படாது. இது அடுத்த சில வாரங்களில் நிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் டிஜிட்டல் புகைப்படங்களின் உலகில் மிகப்பெரிய அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது,அதன்படி,முக அங்கீகார அம்சத்தில் யார் யார் என்பதற்கான துல்லியமான தரவை ஃபேஸ்புக் வழங்குகின்றன.

இந்த அம்சம் முதன்முதலில் டிசம்பர் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது ஃபேஸ்புக்கில்  பதிவேற்றப்படும் புகைப்படங்களில் உள்ளவர்களுக்கு தானாகவே குறிச்சொற்களை(tag) பரிந்துரைக்கிறது. ஃபேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதியால் தங்களது தனியுரிமை பாதிக்கப்படுவதாக பலரும் கூறிவந்தனர்.இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் இருந்து கோடிக் கணக்கான முகரேகைகளையும் அழிக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

58 minutes ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

1 hour ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

3 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

3 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

6 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

6 hours ago