ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராதே ஷியாம்’ இந்த வருகின்ற வெள்ளிக்கிழமை (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.
இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் ‘சலார்’ என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் மது குருசாமி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில், கொச்சியில் நடைபெற்ற ‘ராதே ஷ்யாம்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பாகுபலி நடிகர் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் தன்னுடன் சலார் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.
ஆம், சலார் படத்தில் பிரித்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். ஆம்… படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…