கைதி திரைப்படம் கார்த்திக்காக எழுதவில்லையாம்.! அப்போம் யாருக்கு தெரியுமா ..?
லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை மன்சூர் அலிகான் அவர்களை மனதில் வைத்து தான் எழுதியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படம் விஜய் அவர்களின் பிகில் படத்துடன் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே லோகேஷ் கனகராஜ் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வேறொரு நடிகரை மனதில் வைத்து தான் எழுதினாராம். அதாவது கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தை நடிகர் மன்சூர் அலிகான் அவர்களை மனதில் கொண்டு தான் அந்த கதாபாத்திரத்தின் கதையை எழுதியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் தயாரிப்பாளர் அவர்கள் தான் கார்த்தியை நடிக்க வைக்க கோரியதாக கூறப்படுகிறது.