சகோதரர் வில்லியம் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக இளவரசர் ஹாரி சுயசரிதையில் அதிர்ச்சி தகவல்
இளவரசர் ஹாரியின் சுயசரிதையான ‘ஸ்பேர்’ ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் அவரது நினைவுக் குறிப்பில்,சகோதரர் வில்லியம் அவரை உடல் ரீதியாக தாக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட்டுள்ளதாக , தி கார்டியனின் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
புத்தகத்தில், அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலுடனான தனது திருமணத்தின் காரணமாக அவர்களின் உறவுகளில் ஏற்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அவரது சகோதரர் வில்லியம்( வேல்ஸ் இளவரசர்) உடல் ரீதியாக தாக்கியதாகவும் , “என்னுடைய காலரைப் பிடித்து, என் நெக்லஸைக் கிழித்து, “என்னைத் தரையில் தள்ளினார் என்ற ஒரு நிகழ்வை இளவரசர் ஹாரி விவரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வாரம் உலகம் முழுவதும் வெளியிடப்படும் ‘ஸ்பேர்’ புத்தகமானது தி கார்டியன் பெற்ற ஒரு சிறப்பு பதிப்பின் மூலம் இந்த நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இது பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு கடுமையான கோபத்தைத் தூண்டும் வகையில் தற்பொழுது அமைந்துள்ளது.