இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார்.!
சீனா உஹான் நகரில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 190 நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து நாடுகளும் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 935,957 ஆக அதிகரித்து, பலியின் எண்ணிக்கை 47,245 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 194,286 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துவிட்டார் என இங்கிலாந்து அரசு குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்லஸ் வீடியோ பதிவை போட்டுள்ளார். அதில், கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்திருந்தாலும் சமூக விலகலை கடைபிடிக்க போகிறேன் என்றும் வைரஸ் மிகவும் கொடுமையாக இருந்ததாகவும், தன்னை சுற்றி கடுமையான சூழல் நிலவியது என்று குறிப்பிட்டார். மேலும் மருத்துவர்கள் மற்றும் திறமை மிகுந்த நபர்கள் கடுமையான உழைப்பால் நான் மீண்டுளேன் என்றும் அவர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.
As Patron of @age_uk, The Prince of Wales shares a message on the Coronavirus pandemic and its effect on the older members of the community. pic.twitter.com/a6NEFPOtvQ
— Clarence House (@ClarenceHouse) April 1, 2020