உச்சநீதிமன்றம் தீர்ப்பு : பிரிட்டன் நாடாளுமன்றத்தை போரிஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம் !
ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கு எடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது. பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி எலிசபத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பாராளுமன்றத்தை முடக்குமாறு ராணிக்கு பரிந்துரை செய்யும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவு சட்ட விரோதமானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிரிண்டா ஹலே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுச்சபை மற்றும் பிரபுக்கள் சபையின் சபாநாயகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.