மாகாண ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.!
கொரோனா தாக்கம் குறையாமல் இருக்கும் போது ஊரடங்கை தளர்த்தினால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று கனடா பிரதமர் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கனடாவிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் மோசமான விளைவு ஏற்படும் என்று மாகாண ஆளுநர்களுக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கொரோனாவால் 67,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,693 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில், மாண்ட்ரீல் தீவு கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்கிறது. அங்கு மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் கியூபெக் மாகாணத்தை மீண்டும் வணிகத்திற்கு திறக்க அம்மாகாண ஆளுநர் முடிவு செய்திருப்பது நாட்டையே மோசமான நிலைக்கு தள்ளிவிடும் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.