டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட இருக்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 126 வீரர்கள் செல்ல உள்ளனர். இவர்கள் 18 விளையாட்டுகள் உள்ளடக்கிய 69 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். முதன்முதலாக இந்திய சார்பாக 18 விளையாட்டு போட்டிகள் உள்ளடங்கிய 69 போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவிலிருந்து டோக்கியோ செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் இன்று மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். இந்த உரையாடல் கண்டிப்பாக வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும்.
மேலும், இந்த காணொலி நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னால் நடைபெறும் இந்த கலந்துரையாடல், போட்டியில் பங்குகொள்ளும் வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.