விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி கனடா பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை!

Default Image

கனடா பிரதமர் ஜஸ்டின் உடன் தொலைபேசியில் ஆலோசனை பேசிய பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், விவசாயிகளின் அமைதியான இந்த போராட்டத்திற்கு கனடா எப்பொழுதுமே ஆதரவளிக்கும் எனவும், விவசாயிகளின் போராட்டம் தனக்கு கவலை அளிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமரின் கருத்து குறித்து கனடா தூதர் நதிர் பட்டேலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் கனடா பிரதமரும், மந்திரிகளும் இந்தியாவிலுள்ள விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ நேற்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசப்பட்டதாகவும் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக இரு நாடுகளும் மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகளை பற்றி பகிர்ந்து கொண்டதுடன், இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்புகள் உலக நாடுகளுக்கு மிகுந்த உதவியாக இருப்பது குறித்து இருவரும் பேசியதாகவும் கனடா பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் இருந்ததாகவும், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்