அமெரிக்க அதிபர் ட்ரம்பை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசியன் லொங் ஈரானாவிற்கு அழைப்பு!
கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,ஏவுகணை சோதனை நடத்தி வந்தார். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா சபையில் வடகொரியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தன. தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்றது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வித்திட்ட நிலையில், அணு ஆயுதங்களை அழிக்கும் முயற்சிக்கு கிம் ஜாங் உன் ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்து பேசவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை:
நேற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிங்கப்பூர் வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானத்தில் வந்தடைந்தார்.
பின்னர் டிரம்ப் பயணம் செய்து, கிட்டத்தட்ட 30 வாகனங்களின் பாதுகாப்புடன் ஷாங்கிர-லா ஹோட்டலுக்குச் சென்றார்.
வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் வருகை:
நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிங்கப்பூர் வந்தடைந்தார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்.ஏர் சீனா விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்தார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசியன் லொங் ஈரானாவிற்கு வரவேற்றுள்ளார்.மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை நாளை மதிய உணவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.