அதிர்ச்சி…விண்ணை முட்டும் விலை – ஒரு கிலோ அரிசி இவ்வளவு ரூபாயா?..!

Published by
Edison

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடு காரணமாக அரிசி,சர்க்கரைஉள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின்  விலைகள் விண்ணை முட்டுகின்றன. 

அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு மற்றும் கொரோனா பரவல் காரணமாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது.இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் இழப்பை அரசாங்கம் சந்தித்துள்ளது.

உணவுபொருட்கள் விலை கடுமையாக உயர்வு:

இதனால்,கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உணவு,மருந்து,பால் பவுடர், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.அதன்படி,

  • இலங்கையில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 இலங்கை ரூபாயை எட்டியுள்ளது.
  • இலங்கையில் 400 கிராம் பால் பவுடர் ரூ.790 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த மூன்று நாட்களில் பால் பவுடர் விலை 250 ரூபாய் உயர்ந்துள்ளது.
  • இலங்கையில் ஒரு கிலோ சர்க்கரை(சீனி) விலை 290 ரூபாயை எட்டியுள்ளது.

மின்வெட்டு:

இதற்கிடையில்,பெட்ரோல்,டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதே சமயம்,மின் உற்பத்தி நிலையங்களை இயக்க எரிபொருள் பற்றாக்குறை மற்றும் வறண்ட காலநிலை நீர்மின் திறனைக் குறைத்துள்ளதால்,அங்கு வசிப்பவர்கள் தினசரி அதிக நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,பற்றாக்குறை காரணமாக,எரிபொருட்கள்,உணவுப் பொருட்களை வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

தமிழகம் வருகை:

இதனிடையே,இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் காரணமாக, அங்கிருந்து இலங்கை தமிழர்கள்,அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர்.அந்த வகையில்,யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் இரண்டு குழுக்களாக தமிழ்நாட்டை அடைந்தனர்.வரும் வாரங்களில் சுமார் 2,000 அகதிகள் வர வாய்ப்புள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

20 minutes ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

41 minutes ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

1 hour ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

9 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

12 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

14 hours ago