ஆப்கானிஸ்தானில் உள்ள படைவீரர்களை திரும்பப்பெறும் முயற்சியில் அதிபர் டிரம்ப்…

Default Image
ஆப்கானிஸ்தான் நாட்டில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கன் அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரி மாதம்  தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படையினர் அனைவரையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் வெளியேறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படையினரை அமெரிக்கா குறைத்து வருகிறது. இதற்கிடையில், வெளிநாடுகள் உள்ள படைவீரர்களை அமெரிக்காவிற்கே திரும்ப அழைப்பது அதிபர் டிரம்பின் கடந்த தேர்தல் அறிக்கையாக இருந்தது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள படைவீரர்களை திரும்பப்பெறும் முயற்சியில் அதிபர் டிரம்ப் இறங்கியுள்ளார். ஆப்கானில் தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) அமெரிக்கா திரும்ப அழைத்து வர உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ’ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குறைவான எண்ணிக்கையிலான நமது வீரமிகு படைவீரர்கள் அனைவரையும் வரும்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) திரும்பப்பெற உள்ளோம்’ என தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் உள்பட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்