கொரோனா குறித்து அதிகமான தவறான தகவலை வெளியிட்டது அதிபர் ட்ரம்ப்! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனா குறித்த கட்டுரைகளை ஆய்வு செய்ததில், 38 சதவீத தவறான தகவல்களை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்துள்ளார் என்றும், அவர் தான் கொரோனா குறித்து, உலகிலேயே அதிகமான தவறான தகவல்களை அளித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு இயக்குனரான சாரா இவானேகா கூறுகையில், ‘உலகிலேயே கொரோனா தொடர்பான தவறான தகவல்களை அதிகம் அளித்த ஒற்றை அதிபர் இருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.