அதிபர் டிரம்ப் ,மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும்- ஜோ பைடன்
அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
வால்டர் ரீட் ராணுவ மருத்துவமணையில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வேண்டி உலக நாடுகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் டிரம்பிற்கு எதிராக போட்டியிடும் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று நானும்,எனது மனைவி ஜில்லும் விரும்புகிறோம். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.