வட துருவம் தென் துருவத்திற்கு வாழ்த்து-ஆச்சர்யத்தில் அகிலம்

Default Image

அமெரிக்காவில் கொரோனாத் தொற்று தற்போது தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்புக்கு நடுவில் அடுத்த மாதம் (நவ., 3)ந்தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்க உள்ளது.அங்கு ஏற்கனவே தொற்றை கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று தன் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் ட்ரம்ப் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் திரளான தொண்டர்கள் கூடுவதாலும் அதிக கூட்டங்களில் பங்கேற்பதன் வாயிலாகவும் அதிபர் டிரம்புக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருந்து வந்த நிலையிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி  அக்கூட்டங்களில் பங்கேற்று தனக்கு ஆதரவு திரட்டி வந்தார்.

இந்நிலையில் தான் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவின் உதவியாளர்களில் முக்கியமானவரான ஹோம் ஹிக்சுக்கு (வயது 31) நேற்று முன்தினம் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதை டிரம்ப்  தனது டுவிட்டர் பதிவில் கூறியிருந்த நிலையில் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் ஆகிய இருவருக்கும் உடனே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத வகையில் அவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதித்த டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.மேலும் இன்று வால்மாட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் விரைந்து குணமடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம்  உள்ளனர்.

அவ்வாறு வாழ்த்து தெரிவித்தவர்கள் மிக முக்கியமானவராக பார்க்கப்படுவது வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அவர் அதிபர் டிரம்ப் விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.மேலும், டிரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வட-தென் துருவமாக இருந்த போதிலும் மனிதம் என்று வந்த பிறகு துருவங்கள் தூக்கியெரிந்து இணைவது  தான் சந்தோஷம், இருந்தபோதிலும் அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து சர்வதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்