கடலுக்குள் சுறாவிடம் சிக்கிய கணவரை காப்பாற்றிய கர்ப்பிணி பெண்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அமெரிக்காவில் கடலுக்குள் சுறாவிடம் சிக்கிய கணவரை காப்பாற்றிய கர்ப்பிணி பெண்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் தனது கர்ப்பிணி மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்ட்ரூ என்பவரும், அவர்களின் குடும்பத்தினரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆண்ட்ரூ படகில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென சறுக்கி தண்ணீரில் விழுந்த பொழுது கடலுக்குள் இருந்த சுறாவின் தோளில் அவர் நேரடியாக சென்று விழுந்துள்ளார். சற்று நேரத்திலேயே சுறாவால் அவர் லேசாக தாக்கப்பட்டதால், அவரது ரத்தம் கசிந்து தண்ணீரில் தெரிய ஆரம்பித்துள்ளது.
எனவே, அவரது மனைவி மார்கோட் கர்ப்பிணி மனைவியாக இருந்தாலும் சற்றும் யோசிக்காமல் தனது கணவரை காப்பாற்றுவதற்காக குடும்பத்தினரின் உதவியுடன் கடலுக்குள் குதித்துள்ளார். பின்பு தனது கணவரை மீட்டு ஜாக்சன் நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். கடலுக்குள் இருந்த சுறா 8 முதல் 10 அடி அளவு வரை இருக்கும் என நேரில் கண்ட அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கணவருக்கு ஆபத்து என்றதும் தான் கர்ப்பிணி என்றும் பாராமல் சட்டென்று நீரில் குதித்து காப்பாற்றிய மார்ட்டினின் செயல் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)