பிரிட்டன் பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி மருத்துவர் போராட்டம்
இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி மருத்துவர் போராட்டம் நடத்தினார்.
இங்கிலாந்தில் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ,நர்ஸுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனால் மருத்துவர்கள் அணிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு சாதனங்களுக்கு அங்கு கடும் கட்டுப்பாடு நிகழ்ந்து வருகிறது. இது கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு கடும் கவலையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லம் லண்டனில் உள்ள டவுனிங் பகுதியில் அமைத்துள்ளது.அங்கு 6 மாத கர்ப்பிணி மருத்துவர் மீனால் வீஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் அணியும் சீருடை மற்றும் முகக்கவசம் அணிந்து வந்து போராட்டம் நடத்தினார்.மேலும் சுகாதார பணியாளர்களை காப்பற்றுங்கள் என்ற கோரிக்கையும் வைத்தார்.இவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்.