பாகிஸ்தானில் மசூதியில் நடைபெற்ற தொழுகை! தடுத்து நிறுத்திய போலீசாரை விரட்டியடித்த மக்கள்!

Default Image

சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது.  கோவில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் எந்த மத வழிபாடுகளும் நடத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை நடைபெற்றுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இவர்களை இரண்டு போலீசார் தடுத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் இணைந்து, போலீசாரை கல்லெறிந்து, அடித்தும் விரட்டியுள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை காரோண வைரஸால் 40 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்