நமது அன்றாட வாழ்வில் தினமும் ஒரு நிமிடம் கடவுளை வாங்குவது மிகவும் நல்லது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தினமும் தியானம் செய்வது சிறந்தது. காரணம் காலையில் நமது மனது மிக புத்துணர்ச்சியாக இருக்கும். அப்போது நாம் அன்று என்ன செய்யவேண்டும் எனவும், இன்று நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் எனவும் நமக்குள் கூறிக்கொண்டால் நமது மூளை அதற்காக நம்மை தயார்படுத்த ஆரம்பித்துவிடும். அதனால் தான் பெரியவர்கள் தினமும் கடவுளை வாங்குவதையும், தியானம் செய்வதையும் வழக்கமாக செய்து வந்தனர்.
காலையில் கடவுளை வணங்கும் போது எவ்வாறு வணங்க வேண்டும். என்னவெல்லாம் செய்ய கூடாது என ஒரு வரையறை இருக்கிறது. அதன்படி, சுத்தமாக இருக்கும் இடத்தில் மட்டுமே காயத்ரி மந்திரம் கூறி கடவுளை வணங்க வேண்டும். கற்பூரம் காட்டும் போது முதலில் சாமியின் பாதத்திற்கு 4 முறையும், தொப்புளுக்கு நேரே 2 முறையும், 1 முறை முகத்தை சுற்றியும், மூன்று முறை முழு உருவத்தை சுற்றியும் தீபாராதனை காட்ட வேண்டும்.
நாம் கோவிலுக்கு செல்லும்போது, வீடு மிக சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலம் போட்டிருக்க வேண்டும். விளக்கு ஏற்றி இருக்க வேண்டும். அப்படி விளக்கு ஏற்றிய பிறகு அதில் எண்ணையை தொட்டுவிட்டு அந்த எண்ணையை தலையில் தடவ கூடாது.
அந்தந்த தெய்வங்களுக்கு உகந்த மலர்களை மட்டுமே வைத்து வழிபட வேண்டும். அதாவது, சிவனுக்கு வில்வ இலை, பெருமாளுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல் இலை இவற்றை கொண்டுதான் அந்தந்த தெய்வங்களுக்கு பூஜை செய்ய வேண்டும்.
பெண்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய கூடாது. கோவில்களில் கைகளில் சூடம் ஏற்றி காட்ட கூடாது. பூஜைக்கு உடைத்த தேங்காயில் பிரசாதம் செய்ய கூடாது. அமாவாசை விரதம் இருந்தால் வீட்டில் தான் சாப்பிட வேண்டும். அமாவாசை அன்று வீட்டில் கோலம் போட கூடாது.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…