முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டில் பிறந்த தினம் இன்று..!
இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் பிறந்த நாள்.
பிரதிபா தேவிசிங் பாட்டில் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். மேலும் இவர் அங்கிருக்கும் எம். ஜே. கல்லூரியில் முதுகலைமாணி (எம். ஏ.) பட்டம் பெற்றார்.
இதனையடுத்து மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகவும் இருந்தார். இவர் 2007இல் ஜூலை 19 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.