3 ஆண்டு நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகருக்கு தடை!
அர்ஜுனா விருது பெற்ற மாற்றுத் திறனாளி நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகருக்கு நீச்சல் வீராங்கனைகளைப் படம் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க மூன்றாண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 31, ஏப்ரல் 1, 2, 3 ஆகிய நாட்களில் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளின்போது நீச்சல் வீராங்கனைகளை வீடியோ கேமராவில் படம்பிடித்ததாகப் பிரசாந்த கர்மாகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தனது உதவியாளரிடமும் ஒரு கேமராவைக் கொடுத்துப் படம்பிடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு வந்ததையடுத்து நீச்சல் பிரிவுக்கான தலைவர் வி.கே.தபஸ், பிரசாந்த கர்மாகரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதையடுத்துப் பாராலிம்பிக் கமிட்டி நடத்தும் எந்தவொரு விளையாட்டு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பதற்கு மூன்றாண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.