பிரசன்னாவிடம் தொலைப்பேசியில் கேட்டப்போது டுவிட்டரிலிருந்து விலக மாட்டேன் பிரசன்னா உறுதி
துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனை ஆவிஷமுண்டோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று வைத்து அழைக்கப்பட்டது. இந்த காட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் துல்க்கருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. அதனையடுத்து அவர் தமிழ் மக்கள் அனைவரிடமும் தனது நியாயத்தை விளக்கி மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும் ஒரு சில அரசியல்வாதிகள் அந்த படத்தில் வரும் அந்த காட்சியையே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த சர்ச்சைகளுக்கு எதிராக துல்க்கரை கண்டித்து வருவதோடு அவரின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவருக்கு ஆதரவாக பலர் பேசி விளக்கமளித்துள்ளனர். அதில் நடிகரான பிரசன்னாவும் தமிழ் மக்களுக்காக துல்க்கரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் தற்போது துல்க்கருடன் நடிகர் பிரசன்னாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், மேலும் அவரது குடும்பத்தையும் இந்த விவகாரத்தில் இழுப்பதை கண்டு வருத்தத்தில் உள்ளாராம் பிரசன்னா.
இதனால் நடிகர் பிரசன்னா சமூக வலைத்தளங்களிலிருந்து விலக போவதாக சில தகவல்கள் வெளியாகியது. இது குறித்துபிரசன்னாவிடம் தொலைப்பேசியில் கேட்டப்போது, யாரோ ஒரு சிலர் நடந்து கொள்ளும் விஷயத்திற்காக நான் எதற்கு டுவிட்டரிலிருந்து விலகவேண்டும். பலமுறை எனக்கு அன்பும், ஆதரவும் டுவிட்டரிலிருந்து கிடைத்துள்ளது. டுவிட்டரில் எனக்கு கிடைத்த பேரன்பே எனக்கு முக்கியம், வேறேதும் பொருட்டில்லை என்று கூறியுள்ளார். இதிலிருந்து சமூக வலைத்தளங்களிலி அவர் விலக போவதாக கூறியது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…