டிஜிட்டலில் களமிறங்கும் பிரசன்னா.! இயக்குநர் யார் தெரியுமா.?

பிரசன்னா அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் பிரசன்னா. கடைசியாக அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா ஒரு புதிய வெப் சீரிஸை தயாரிக்கிறார். அந்த வெப் சீரிஸில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, அபிராமி வெங்கடாசலம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பிரசன்னா நடிக்கும் எபிசோடை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும், அந்த ஆந்தலாஜி குறும்பட எபிசோடிற்கு ‘திரவம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்தாண்டு அருள்நிதி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான ‘k13’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரசன்னாவுடன் இரண்டு முறை பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றும், இந்த முறை அவரை வைத்து குறும்படம் இயக்குவதாகவும், விரைவில் இதனை குறித்த மற்ற விவரங்கள் வெளிவரும் என்று கூறினார்.
Glad to have worked twice with @Prasanna_actor , one of the best actors in Tamil cinema! This time I get to Direct him! ????
More details coming soon!
#ArhaMedia #SNDSDreamcatchers @ahavideoIN @DC_SNDS @N_sujatha08 pic.twitter.com/jtza0GzbgV
— Barath Neelakantan (@dir_barath) August 10, 2020