விஷால்-ஆர்யா படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்.!
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் “Enemy” (எனிமி) படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.
எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் நடிப்பதாக கூறப்படுகிறது.ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன்,தமிபி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.”Enemy” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஷால்-ஆர்யா நடிக்கும் படத்தில் புதிதாக பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தில் இவர் தான் எனிமியா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.விரைவில் இந்த படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.