தனுஷின் 44- வது படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “மாறன்”. இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது D44 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது. முதல் அறிவிப்பாக இயக்குனர் பாரதி ராஜா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் தனுஷுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நான்காவது முறையாக தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…