கிராண்ட்ஸ்லாம் ஓபனில் விளையாட தகுதி பெற்றார்..! இந்திய வீரர் குணேஸ்வரன்..!!
டென்னிஸ் உலகில் கிராண்ட்ஸ்லாம் என்கிற உயரிய அந்தஸ்தான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரானது மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் கடந்த சில தினங்கள் இந்த தொடருக்காக தகுதி சுற்று போட்டிகள் நடந்தது. இதில் ஆண்கள் அணி பிரிவில் தகுதி சுற்றுக்கான 3வது மற்றும் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் யோசுக் வாடானுகியை நேற்று எதிர்கொண்டு விளையாடினார்.இந்த போட்டியின் முடிவில் குணேஸ்வரன் 6-7 (5), 6-4 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று விளையாட தகுதி பெற்றார்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டிக்காக ஒற்றையர் பிரிவில் விளையாட தகுதி பெற்ற 3வது இந்தியர் குணேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் யுகி பாம்ப்ரி ஆகியோர் ஆடிடினார்கள் என்பது சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இதனிடையே முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் எல்லா சுற்றையும் கைப்பற்றிய மகிழ்ச்சியில் தமிகத்தின் தலைநகர் சென்னை சேர்ந்த 29 வயதே ஆகும் குணேஸ்வரன் ஆஸ்திரேலிய ஓபனில் முதலாவது சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவுடன் பலப்பரிச்சை நடத்துகிறார்.இந்நிலையில் தகுதி சுற்றில் மூன்று ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த குணேஸ்வரன் அடுத்த சுற்றுக்கும் வந்து விட்டதால் அவருக்கு குறைந்தது ரூ.38 லட்சம் பரிசு கிடைப்பது உறுதியாகி உள்ளது.