பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக கன்னட நடிகரான மது குருசாமி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸ் கைவசம் தற்போது ராதே ஷ்யாம், நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம்,ஆதிபுருஷ் சலார் ஆகிய படங்கள் உள்ளது. இதில் சலார் படத்தினை கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த படத்தினையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதே போன்று படத்தின் பூஜையானது சமீபத்தில் ஹைதராபாத்தில் வைத்து நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பது தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் சலார் படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சலார் படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர மது குருசாமி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் சிவராஜ்குமார் நடித்த வஜ்ரகயா உட்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…