கேஜிஎஃப் இயக்குனருடன் கைக்கோர்க்கும் பிரபாஸ்.!வெளியாகியது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் அவர்களின் படத்தை இயக்கவுள்ளதாகவும் , அதற்கு சலார் என்று பெயரிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ராதே ஷியாம் எனும் படத்தில் நடித்து வருகிறார் .அதனை தொடர்ந்து தீபிகா படுகோனே உடன் இணைந்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இது அவருடைய 21வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின் ஆதி புருஷ் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு,கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளிலும் உருவாகவுள்ளது.இதன் படப்பிடிப்பானது அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கப்படும் என்றும், படத்தினை ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரபாஸ் அவர்கள் ஆதிபுருஷ் படத்தினை தொடர்ந்து சூப்பர் பட இயக்குனருடன் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்பட்டது.அதாவது பிரபாஸ் அடுத்தாக கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீலுடன் இணைய உள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் -2 படத்தினை தொடர்ந்து பிரசாந்த் நீல் பிரபாஸ் படத்தை இயக்கவுள்ளார் .இந்த படத்தினையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.பிரபாஸ்-பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு சலார் என்று பெயரிடப்பட்டுள்ளது . தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் பிரபாஸை இதுவரை பார்க்காத வேடத்தில் ரசிகர்கள் பிரித்து ரசிப்பார்கள் என்று பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.மெகா ஹிட் படத்தினை தனது இயக்கத்தாலும் ,நடிப்பாலும் ரசிகர்களுக்கு கொடுத்த இந்த கூட்டணியின் சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
An Action Saga #SALAAR.
THE MOST VIOLENT MEN.. .CALLED ONE MAN… THE MOST VIOLENT!!
For the love of cinema, breaking the fence of languages, presenting to you an Indian Film.
Dearest welcome to Darling #Prabhas sir.@hombalefilms @VKiragandur pic.twitter.com/PKOfQKkSM6— Prashanth Neel (@prashanth_neel) December 2, 2020