பிரபாஸின் 20வது படமான ராதேஷ்யம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரமாண்ட திரைப்படமான பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். தென்னிந்தியா சினிமாயுலகை திரும்பி பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. கடந்த 2017ம் ஆண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி 2500கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
‘ராதே ஷ்யாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப் படத்தினை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி. சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும் சச்சின் கெடேகர், பாக்ய ஸ்ரீ, பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. தற்போது அந்த போஸ்ட்ரை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…