ஆசியா அளவிலான டாப் 10 ஹீரோக்களில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பாகுபலி திரைப்படத்தின் மூலமாக பிரபாஸ் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவர் ஒரு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். மேலும், இவரது சம்பளம் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவியை விட அதிகம் ஆகியிருப்பதும் உண்மை.
பாகுபலி படத்தின் மூலமாக இவரது படங்களின் வியாபார எல்லை மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இவர் தற்சமயம் ராதேசியாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆசியாவில் 2021 ஆம் வருடத்தின் சிறந்த ஹேண்ட்ஸம் நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் பாகுபலி பிரபாஸ்.
இதில் இரண்டாவது இடத்தை பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் அப்பாஸ் நக்வி பிடித்துள்ளார். மேலும், ஒரு இந்திய நடிகர் இதில் இடம் பிடித்துள்ளார், விவியன் டி சேனா ஏழாம் இடத்தை பிடித்துள்ளார். தொலைக்காட்சி நடிகரான இவர் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு மதுபாலா என்ற பெயரில் வெளியான நாடகத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…