பிரமாண்டமாக படப்பிடிப்பை தொடங்கிய பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’.!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது .மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணம் கதையை தழுவி படமாக்க உள்ளதாகவும் ,அதில் பிரபாஸ் ராமனாகவும் ,சைஃப் அலிகான் ராவணனாகவும் ,சீதையாக கிருத்தி சனோனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .
மேலும் இந்த படத்தினை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக இயக்குனர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனை ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
#Adipurush aarambh. #Prabhas #SaifAliKhan #BhushanKumar @vfxwaala @rajeshnair06 @TSeries @retrophiles1 #TSeries pic.twitter.com/LbHvEFhmFF
— Om Raut (@omraut) February 2, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025