இராமாயணத்தை தழுவி உருவாகும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் சீதையாக கிருதி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது .மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணம் கதையை தழுவி படமாக்க உள்ளதாகவும் ,அதில் பிரபாஸ் ராமனாகவும் ,சைஃப் அலிகான் ராவணனாகவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது .
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த படத்தினை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக இயக்குனர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் சீதையாக நடிப்பதாக அனுஷ்கா சர்மா,கிளாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டது .இந்த நிலையில் தற்போது பிராஸூக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான கிருதி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் ‘1: நெனோக்காடின்’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…