500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’.! ராவணனாக நடிக்கும் பிரபல இந்தி நடிகர்.!

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் இந்தி நடிகரான சயிஃப் அலிகான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் அவரது 22வது படத்தினை குறித்த தகவல்கள் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ருடன் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. ஓம் ராவத் இயக்கத்தில் “AdiPurush” என்று பெயரிடப்பட்டுள்ள்ள இந்த படத்தை பூஷன் குமாரின் டி. சீரிஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதாகும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் மற்ற வெளிநாட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 3டி ல் உருவாகும் இந்த படம் கடவுள் விஷ்ணுவின் முதல் அவதாரத்தை மையமாக கொண்டு ராமாயண காவியத்தினை தழுவி எடுக்கப்படும் படம் என்று கூறப்படுகிறது.
இதில் பிரபாஸ் ராமனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராவணனாக சயிஃப் அலிகான் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவரது கதாபாத்திரம் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய அமானுஷ்ய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் நடிப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025