கடவுள் விஷ்ணுவின் முதல் அவதாரத்தை மையமாக வைத்து உருவாகும் பிரபாஸ்22.! ஹீரோயின் யார் தெரியுமா.?

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது அந்த படம் கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் அவரது 22வது படத்தினை குறித்த தகவல்கள் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ருடன் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. ஓம் ராவத் இயக்கத்தில் “AdiPurush” என்று பெயரிடப்பட்டுள்ள்ள இந்த படத்தை பூஷன் குமாரின் டி. சீரிஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதாகும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் மற்ற வெளிநாட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 3டி ல் உருவாகும் இந்த படம் கடவுள் விஷ்ணுவின் முதல் அவதாரத்தை மையமாக கொண்டு ராமாயண காவியத்தினை தழுவி எடுக்கப்படும் படம் என்று கூறப்படுகிறது.
இதில் பிரபாஸ் ராமனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அப்போது சீதையாக நடிப்பது யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்த நிலையில் சமீபத்தில் அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சுஷாந்த் சிங்கின் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025