பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 7 ஆக பதிவு!
பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு, 7-ஆக பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவிலும், பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 12:23 (இந்திய நேரப்படி மாலை 5:53) மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் ஆடியதால், மக்கள் அச்சமடைந்தனர்.