துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; 10 பேர் பலி.!
துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் உணர்வு பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலியென்டெப் பகுதியில் கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில் சுனாமி ஆபத்து குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Massive #earthquake registered M7.8 hit the middle of Turkey. pic.twitter.com/mdxt53QlQ0
— Asaad Sam Hanna (@AsaadHannaa) February 6, 2023